காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்த சனசமூக நிலையமும் இணைந்து “விபுலாநந்த விளையாட்டுக் கழகத்திலிருந்து உயிர்நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாக” நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி - 2023
இறுதி போட்டியில் சொறிக்கல்முனை சாந்தகுரோஸ் விளையாட்டுக்கழகமும் சம்மாந்துறை எவர்கிறீன் விளையாட்டுக்கழகமும் மோதி இருந்தன. விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் முழுநேர முடிவில் சொறிக்கல்முனை சாந்தகுரோஸ் விளையாட்டுக்கழகம் 3:1 என்ற கோல்கள் அடிப்படையில் சொறிக்கல்முனை சாந்தகுரோஸ் வெற்றிபெற்று சம்பியனாக தெரிவாகியது.
காரைதீவு விளையாட்டுக்கழக தலைவர் திரு.ரி.தவக்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக பிரதம அதிதியாக முன்னாள் சிறைச்சாலை அத்தியட்சகர் அருளாநந்தம் கந்தராஜா மற்றும் கழக போசகர்களான வே.ராஜேந்திரன், வி.ரி.சகாதேவராஜா மற்றும் முன்னாள் விபுலாந்த விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு மேலும் காரைதீவு விளையாட்டுக்கழக சிரேஷ்ட கனிஷ்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக சொறிக்கல்முனை சாந்தகுரோஸ் விளையாட்டுக்கழக வீரர் சதுர்சன் தெரிவு செய்யப்பட்டதோடு தொடரின் சிறப்பாட்டக்காரராக சம்மாந்துறை எவர்கறீன்விளையாட்டுக்கழக வீரர் டெரிக்ஷ்சன் தெரிவுசெய்யப்பட்டார்.
தொடரின் சம்பியனாக தெரிவு சொறிக்கல்முனை சாந்தகுரோஸ் விளையாட்டுக்கழகத்தினருக்கு பெறுமதியான வெற்றிக்கிண்ணமும் 25,000/- பணப்பரிசிலும் வழங்கப்பட்டது.
இரண்டாமிடம் பெற்ற சம்மாந்துறை எவர்கறீன்விளையாட்டுக்கழகதினருக்கு பெறுமதியான வெற்றிக்கிண்ணமும் 20,000/- பணப்பரிசிலும் வழங்கப்பட்டது.
இச்சுற்றுப்போட்டியை சிறப்பாக நடாத்த விபுலாநந்த விளையாட்டுக் கழக முன்னாள் உறுப்பினர்கள் சார்பாக வழங்கிய கந்தராஜா(UK), Dr.வரதராஜா(Canada), கரிகரராஜா(UK) Mகியோர் அனுசரனை வழங்கியமை குறிப்பிடதக்கது.