காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் தனது 36 ஆவது ஆண்டினை சிறப்பிக்கும் முகமாக கழகத்தின் மறைந்த போசகர் அமரத்துவமடைந்த சீனித்தம்பி பேரின்பம் ஞாபகார்த்த T10 கிரிக்கெட் கடினப்பந்து இறுதிச்சுற்று போட்டி போட்டியும் கல்வி சாதனையாளர்கள் பாராட்டு விழாவும் விபுலானந்தா மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மைதானத்தில் கழகத்தின் கௌரவத் தலைவர் திரு லயன் S . நேசராசா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் மற்றும் நட்சத்திர அதிதியாக ஒய்வு நிலை தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் திருமதி பேரின்பம் சாரதாதேவி மற்றும் முதன்மை அதிதிகளாக கிழக்கு மாகாண கூட்டுறவு திணைக்கள ஆணையாளரும் மேலதிக மாகாண கல்வி பணிப்பாளருமான எந்திரி திரு N . சிவலிங்கம் மேலும் கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் திரு கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மற்றும் விபுலானந்த மத்திய கல்லூரி தேசிய பாடசாலை அதிபர்
திரு M. சுந்தரராஜன் மற்றும் சண்முகா மகா வித்யாலய அதிபர் திரு S . மணிமாறன் அதேபோன்று தாதிய முகாமையாளர் தேசகீர்த்தி தேசபந்து திரு N. சசிகரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இறுதிச்சுற்று போட்டியிலே சாய்ந்தமருது பிளைங் கோஸஸ் விளையாட்டு கழகத்தினை எதிர்த்து கல்முனை லெஜெண்ட் விளையாட்டு கழகம் மோதி இருந்தனர் இறுதிப் போட்டியில் கல்முனை லெஜென்ட் விளையாட்டுக்கழகம் சம்பியன் பட்டத்தினை தனதாக்கிக் கொண்டது வெற்றி பெற்ற கல்முனை லெஜெண்ட் விளையாட்டு கழகத்திற்கு ரூபாய் 30,000 மற்றும் பெறுமதி மிக்க வெற்றி கிண்ணமும் மற்றும் இரண்டாம் இடத்தை தட்டிச் சென்ற சாய்ந்தமருது பிளைங் கோஸஸ் விளையாட்டு கழகத்திற்கு ரூபாய் 20,000 மற்றும் பெறுமதி மிக்க வெற்றி கிண்ணமும் மேலும் இறுதி போட்டியின் ஆட்டநாயகன் சுற்று போட்டியின் தொடர் நாயகன் மற்றும் சுற்று போட்டியின் சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் சுற்று போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என்ற விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது மற்றும் அமரர் சீனித்தம்பி பேரின்பம் அவர்கள் குடும்பம் சார்பாக சிறப்புரையினை மாவட்ட பரிசோதகர் தேசிய பயிலுனர் பயிற்சி அதிகாரசபை உத்தியோகத்தர் திரு A . செல்வபிரகாஷ் நிகழ்த்தி இருந்தார் இறுதியாக கழகத்தின் கௌரவ செயலாளர் K . உமாரமணன் அவர்களின் நன்றி உரையுடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது.