"அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்" எனும் தொனிப் பொருளில் காரைதீவு பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் அவர்களும் அம்பாரை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் ஜனாப்எம்.எஸ். எம்.சப்றாஸ் அவர்களும், காரைதீவு பிரதேச செயலக உதவிபிரதேச செயலாளர் திரு எஸ் பாத்தீபன் அவர்களும், கணக்காளர் ஜனாபா ஏ. எல்.றிம்ஸியா அவர்களும் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம் எம் அச்சிமுகமட் அவர்களும், உதவி திட்டமிடல்பணிப்பாளர் இராஜகுலேந்திரன் அவர்களும் ,சிறுவர் மகளிர் அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்களும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் மற்றும் மகளிர் சங்கங்களின் உறுப்பினர்களும் சமுர்த்தி பிரிவு மற்றும் ஏனய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர் .
இந்நிகழ்வில் சிறந்த பெண் தொழில் முயற்சியாளராக தசரதா ரவிந்திரன் கௌரவிக்கப்பட்டார். அத்துடன் சிறந்த பெண் தலைமைத்துவம் கொண்ட பெண் சாதனையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர் அத்துடன் "சமுர்த்தி செளபாக்கியா" வீட்டுத்திட்டத்தின் மூலம் நிறைவு பெற்ற வீடு ஒன்றும் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் உத்தியோகத்தர்களின் கவிதை பாடல் என்பன இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.