காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் மகளிர் தின நிகழ்வு ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 13 மார்ச், 2023

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் மகளிர் தின நிகழ்வு !

 சர்வதேச மகளிர் தின நிகழ்வு அம்பாறை காரைதீவில் சிறப்பாக இடம்பெற்றது.

கிழக்கு இளைஞர்கள் அமைப்பு மற்றும் மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்கம் ஆகியன காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துடன் இணைந்து

மகளிர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் வைத்தியர் தஸ்லிமா வஸீர் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வில் வளவாளர்களாக பிராந்திய தாய் செய் நல வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச். றிஸ்வின் மற்றும் பிராந்திய தொற்று நோயியல் வைத்திய அதிகாரி வைத்தியர்

எம்.ஏ.சி.எம் பசால் ஆகியோர் பங்கேற்றனர்.

மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்க தலைவர் எம்.ரி.எம். நௌஷாத், பொது சுகாதார தாதிய அதிகாரி திருமதி ராஜேந்திரகுமார்,

மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் பைசால் முஸ்தபா உட்பட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.









Post Bottom Ad

Responsive Ads Here

Pages