காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் 2023ஆம் ஆண்டின் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 2 ஜனவரி, 2023

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் 2023ஆம் ஆண்டின் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு !

 காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லீமா வசீர் அவர்களின் ஏற்பாடு செய்யப்பட்ட 2023ஆம் ஆண்டின் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று திங்கட் கிழமை நடை பெற்றது.

காரைதீவு சுகாதார வைத்தியர் தஸ்லீமா வசீர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் நாட்டின் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன்  உத்தியோகத்தர்கள் இவ்வாண்டிற்கான அரச சேவை  உறுதியுரையை சத்தியப்பிரமாணம்  செய்து கொண்டனர்.இதே வேளை  நாட்டிற்காக உயிர் நீத்த முப்படை வீரர்கள் மற்றும்  பொலிஸாருக்கு 2 நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்,பொது சுகாதார பரிசோதகர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,நுளம்பு கள தடுப்புப் பிரிவினர்,அலுவலக ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.







Post Bottom Ad

Responsive Ads Here

Pages