அம்பாரை மாவட்ட பனை அபிவிருத்தி சபையினால் கடந்த ஒரு வருடகாலமாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் காரைதீவு 01மற்றும் காரைதீவு 12ம் பிரிவு பயனாளிகளை இணைத்தவகையில் நடத்தப்பட்ட பனைசார் கைத்தொழிற்பயிற்ச்சி நிகழ்வின் இறுதி நிகழ்வு காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது. இன்நிகழ்விற்கு அம்பாரை மாவட்ட பனை அபிவிருத்தி சபை முகாமையாளர் கிராம உத்தியோகத்தர்கள், பயனாளர்கள் கலந்து கொண்டனர்.இதன் போது பயனாளிகளுக்கு 9000 பெறுமதியான
காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டது .