2021(2022) ஆம் ஆண்டு கல்விப்பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையில் எமது கல்லூரிக்கும் எமது தாய் மண்ணிற்கும் பெருமை சேர்த்த மாணவிகளை காரைதீவு சமூகத்தின் சார்பில் கெளரவிக்கும் நிகழ்வு மாணவிகள் ஒவ்வொருவரினதும் வீட்டில் வைத்து இடம்பெற்றது.
1. L. புவித்ரா 3A (Medicine)
2. T. டயானு 3A (Medicine)
3. S. டிவானுஜா 3A (Medicine)
4. R. கம்சாயினி 2A,B (Medicine)
5. R. துர்க்கா 3A (Engineering)
மேற்குறிப்பிட்ட மாணவிகளுக்கு Karaitivu Development Planning Society பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்து நினைவுச்சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு அமைப்பின் தலைவர்- Eng.P.ராஜமோகன், செயலாளர்-திரு.T.பத்மசீலன், பொருளாளர்-திரு.T.சுசிகரன், உப பொருளாளர்- Eng.T.சுரேந்திரகுமார் மற்றும் போசகர்களான Dr.திருமதி.J.சிவசுப்ரமணியம் (ஜீவா) மற்றும் திரு.N.குலேந்திரன் ஆகியோரும் கலந்துசிறப்பித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மாணவ மாணவிகள் அனைவருக்கும் காரைதீவு உள்ளூர் புலம்பெயர் வாழ் அனைத்து உறவுகள் சார்பிலும் இவ்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.