இந்துமத எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற காரைதீவு- மண்டூர் திருத்தல பாதயாத்திரை ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வியாழன், 8 செப்டம்பர், 2022

இந்துமத எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற காரைதீவு- மண்டூர் திருத்தல பாதயாத்திரை !

இந்துமத எழுச்சியுடன்  சிறப்பாக நடைபெற்ற காரைதீவு- மண்டூர் திருத்தல பாதயாத்திரை.
ஐயாயிரம் அடியார்கள் உணர்வுடன் பங்கேற்பு.

காரைதீவில்  இருந்து மண்டூர்  முருகன் ஆலயத்திற்கான திருத்தல பாதயாத்திரை இந்துமத எழுச்சியுடன்  சிறப்பாக நடைபெற்றது. 

முன்னொரு போதுமில்லாத வகையில் சுமார் ஐயாயிரம் அடியார்கள் உணர்வுடன் கலந்து கொண்டனர்.காரைதீவு அடியார்களுடன் அட்டப்பள்ளம், திராய்க்கேணி, வீரமுனை ஆகிய கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

முருகப்பெருமான் திருவுருவப் படங்கள் தாங்கிய அலங்கரிக்க பட்ட ஏழு உழவு இயந்திரங்கள் முன்னதாக செல்ல, அடியார்கள் "அரோகரா" கோசம் விண்ணைப்பிளக்க, நந்திக் கொடி தாங்கி ,.பஜனைப் பாடல்கள் சகிதம் பாதயாத்திரை நகர்ந்தது. சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் அடியார்கள் வரிசையில் சென்றமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

நேற்று (3) சனிக்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் மாவடி ஸ்ரீ கந்த சுவாமி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட பாதயாத்திரை ஐந்து மணியளவில் கண்ணகை அம்மன் ஆலயத்தை அடைந்தது. அங்கிருந்துகல்முனை தரவைப் பிள்ளையார் ஆலயம் ,ஸ்ரீ முருகன் ஆலயத்தை அடைந்து  நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ,கிட்டங்கி, சவளக்கடை ,நாவிதன்வெளி, வேப்பயடி ,தம்பலவத்தை சென்று மண்டூர் ஆலயத்தை சென்றடைந்தது. இடையிலேயே ஆலயங்கள் அன்பர்கள் நீராகாரம் வழங்கினார்கள்.

ஆலயத்தை சென்றடைந்ததும் அங்கு காரைதீவு அடியார்கள் பஜனை பாடி பூஜையில் கலந்து கொண்டனர்.கடந்த இரண்டு வருடங்களுக்கு பிற்பாடு இடம்பெற்ற பாதயாத்திரை என்பதால் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.


(காரைதீவு  நிருபர்)







 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages