WTBF அமைப்பின் ஏற்பாட்டில் Holland நாட்டின் அனுசரணை மற்றும் இலங்கை பூப்பந்தாட்டக் கிளையுடனும் இணைந்து நடாத்துகின்ற அம்பாரை மாவட்ட பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு நிந்தவூர் MAC Sports Park பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இதன்போது வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கான வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாரைமாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.ஐ.எம். அமிர் அலி கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் பல சிறப்பதிதிகளும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.