காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் வரவு ஒழுங்கீனமான மாணவர்களின் வரவை அதிகரிப்பது தொடர்பாகவும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விசேட வகுப்புகளை ஏற்பாடு செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடல் ஒன்று காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர், காரைதீவு மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு போன்ற இடங்களில் உள்ள பாடசாலை அதிபர்கள் மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் உளவள ஆலோசகர்கள் போன்றோர்கள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்திலனை பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.