காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலை அணி பூப்பந்தாட்ட போட்டியில் அகில இலங்கை மட்டத்திற்கு தெரிவு ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வியாழன், 8 செப்டம்பர், 2022

காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலை அணி பூப்பந்தாட்ட போட்டியில் அகில இலங்கை மட்டத்திற்கு தெரிவு !

 கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் நடாத்தி வரும் விளையாட்டு போட்டிகளில் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டியில் கல்முனை வலயத்தின் காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலை அணி மாகாண சாம்பியனாகி அகில இலங்கை ரீதியிலான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண மட்ட பெரு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


அதன் ஒரு பெரு விளையாட்டான பூப்பந்தாட்ட விளையாட்டு போட்டியின் இறுதிச் சுற்று நிந்தவூர் அஷ்ரக் தேசிய பாடசாலை உள்ளக அரங்கில் நேற்று முன்தினம்  நடைபெற்றது.

18 வயதுப் ஆண்களுக்கான பிரிவின் இறுதி போட்டியில் திருகோணமலை மாவட்ட அணியும் அம்பாறை மாவட்ட அணியும் மோதின. அதில் 3-1என்ற புள்ளி வித்தியாசத்தில் அம்பாறை மாவட்ட அணியான காரைதீவு விபுலானந்தா அணி *சாம்பியனாக* ஆக தெரிவு செய்யப்பட்டது.

வெற்றி பெற்ற விபுலானந்தா அணிக்கு கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹதுல் நஜீம் ,அதிபர் ம.சுந்தரராஜன் ஆகியோர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

அணி பயிற்றுவிப்பாளர் ப.வசந்த்(so) ,வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் இப்ராகிம் , விளையாட்டு ஆசிரியர் ஜெ.சோபிதாஸ், பாடசாலை பயிற்றுவிப்பாளர்களான சுலக்ஷன், லோகதாஸ் , அணித்தலைவர் தட்சணாமூர்த்தி யுகேஷன் தலைமையிலான அணியினர் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.






Post Bottom Ad

Responsive Ads Here

Pages