ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில், ஆலயகுரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்கள் தலைமையில் உற்சவம் நடைபெற்றது.
ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ், வண்ணக்கர் வன்னியசிங்கம் ஜயந்தன் உள்ளிட்ட பரிபாலன சபையினர், ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டனர்.
கடந்த வருடம் ஆடிவேல் உற்சவம் கொரோனா தீநுண்மியின் தாக்கம் காரணமாக நடைபெறவில்லை. இம்முறை இதனை வெகு சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.
இந்த உற்சவம் 17 நாட்கள் நடைபெற்று ஜுலை மாதம் இருபத்தி எட்டாம் (28)தேதி வியாழக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைய இருக்கின்றது.
இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களால் சிறிய கோயிலாக அமைக்கப்பட்டு பின்பு இராஜராஜ சோழர் காலத்தில் கற்கோயில் அமைக்க பெற்று நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டு ஆடி அமாவாசை உற்சவமும் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமும் பகலில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுவருகிறது.
பிதிர்க்கடன் செலுத்துகின்ற ஆடி அமாவாசை உற்சவம் என்பதால் இம்முறை பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்பதற்காக முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.