கதிர்காம பாத யாத்திரைக்கான உகந்தை மலை காட்டுப்பாதை திறந்து வைக்கும் நிகழ்வு ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

சனி, 23 ஜூலை, 2022

கதிர்காம பாத யாத்திரைக்கான உகந்தை மலை காட்டுப்பாதை திறந்து வைக்கும் நிகழ்வு !

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழாவையொட்டிய இவ்வருடத்திற்கான காட்டுப்பாதை உகந்தமலை முருகனாலயத்தில் விஷேட பூசை வழிபாடுகளின் பின்  இன்றைய தினம்  22.06.2022திறந்து வைக்கப்பட்டது.

இம்முறை ஆடிவேல்விழா எதிர்வரும் ஜூலை 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 12 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று உகந்தமலை முருகனாயல ஆடிவேல்விழாவும் இக் காலத்தில் நடைபெறும்.

அதேவேளை உகந்தை மலை  முருகனா லயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் இம் மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருக்கிறது.

காட்டுப்பாதை திறந்துவைக்கும் நிகழ்வானது 22.07.2022  இன்று காலை 7.00மணிக்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் ஆலய பிரதமகுரு சிவஶ்ரீ சீத்தாராம் குருக்கள், உதவிக்குருக்கள் சிவஶ்ரீ கோபிநாதசர்மா ஆலய வண்ணக்கர் திரு. திசாநாயக்க சுதுநிலமே மொனராகலை மேலதிக அரசாங்கஅதிபர்,லாகுகல பிரதேச செயலாளர் திரு ந.நவநீதராஜா, கிழக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திரு எஸ். நவநீதராஜா,முப்படை அதிகாரிகள், வனபாதுகாப்பு உயர் அதிகாரிகள், காரைதீவு தவிசாளர்"திரு.கி.ஜெயசிறில்,மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் திரு கு.ஜெயராஜி,  ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள்,யாத்திரை அடியார்கள் என பலரும் கலந்து"கொண்டனர்.

கதிர்காமத்திற்கு செல்லும் குமண யால சரணாலய காட்டுப்பாதை இன்றைய தினம் 22.07.2022ஆம் திகதி காலை திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 13 தினங்கள் திறந்திருக்கும் இக் காட்டுப் பாதையானது 05.08.2022 ஆம் திகதி மாலை 3 மணியுடன் மூடப்படவுள்ளது என அம்பாறை மாவட்ட மேலதிக அரசஅதிபர் வே.ஜெகதீசன் தெரிவித்தார்.

இம்முறை காட்டுப்பாதையூடாக பயணிக்கும் பக்தர்களின் நலன்கருதி பாதுகாப்பு ஏற்பாடுகளும் காடுகளில் குடிநீர் வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கும் நடவடிக்கை யில் படையினர் மற்றும் பிரதேச சபைகள் ஈடுபட்டுள்ளன .

தற்போது வடக்கு கிழக்கிலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் அடியார்கள் உகந்தமலை முருகனாலயத்தை வந்தடைந்துள்ளனர். மேலும் பல அடியார்கள் அம்பாறை மாவட்டத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையானது தினமும் 6 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 3 மணியுடன் மூடப்படவுள்ளது. அடியார்களின் பாதுகாப்பு கருதி காடுகளுக்குள் தனியாக உட்பிரவேசிப்பதற்கு இம்முறை அனுமதிக்கப்படமாட்டார்கள். குழுக்களாகவே காட்டுக்குள் செல்ல அனுதிக்கப்படுவார்கள்.








 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages