கடன் அட்டைகளுக்கான வட்டி வீதங்கள் அதிகரிப்பு ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 25 ஜூலை, 2022

கடன் அட்டைகளுக்கான வட்டி வீதங்கள் அதிகரிப்பு !


இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதத்தை அதிகரித்துள்ளன.

கடன் அட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதம் 36 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வங்கிகள் தெரிவிக்கின்றன.

கடன் அட்டைகளுக்கு வழங்கப்படும் வட்டி வீதங்களின் விதிக்கப்பட்ட வரம்புகளை நீக்க , மத்திய வங்கியின் நாணயச் சபை ஏப்ரல் 08 ஆம் திகதி தீர்மானித்தது.

அதன் பிறகு, வட்டி வீதங்கள் ஏற்கெனவே இருந்த 18% லிருந்து 24% ஆகவும், பின்னர் 30% ஆகவும், தற்போது மீண்டும் 36% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.


 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages