முத்தமிழர் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் மகா சமாதி தினம்(19.07.2022) கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தர் அழகிய கற்கை நிலையத்தில் நடைபெற்றது .
பணிப்பாளர் திருமதி பாரதி கென்னடி புளோரன்ஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா.செல்வராசா உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி தக்ஷயானந்தாஜீ அரசாங்க அதிபர் க. கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் சுவாமி விபுலானந்தரின் மகா சமாதி தினத்தை இனிமேல் கல்வியலாளர் தினமாக பிரகடனம் செய்வதாக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் தெரிவித்தார்.
(காரைதீவு சகா)