முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் திருவுருவச் சிலை நிறுவும் நிகழ்வு - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வியாழன், 14 ஜூலை, 2022

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் திருவுருவச் சிலை நிறுவும் நிகழ்வு

 முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் 75வது மகா சமாதி ஆண்டினை முன்னிட்டு இந்து சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றத்துடன் இணைந்து சுவாமியவர்களின் மார்பளவு திருவுருவச் சிலையானது , காரைதீவு மத்திய வீதிக்கான நுழைவாயிலில் காரைதீவு அருள்மிகு கண்ணகியம்மன் ஆலய முன்றலில் நிறுவப்படவுள்ளது. இத் திருவுருவச் சிலையினை நிறுவும் நிகழ்வானது திணைக்களத்தின் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு . K. ஜெயராஜி அவர்களின் தலைமையில் கடந்த 2022.07.11 அன்று   இடம்பெற்றது. இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ K. ஜெயசிறில் , காரைதீவு ஆலய அறங்காவலர் சபையினர் சார்பாக தலைவர் திரு. R. குணசிங்கம், செயலாளர்  திரு. S. நந்தேஸ்வரன் மற்றும் உறுப்பினர்களும்   சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றத்தின் சார்பாக முன்னாள் தலைவர்  திரு. V.T. சகாதேவராஜா,  உப தலைவர் திரு. S. ஸுரநுதன்,  உப செயலாளர் திரு. S. விஜயரெத்தினம், கணக்காய்வாளர் திரு. V. குலேந்திரன் மற்றும் உறுப்பினர்களும்,  காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களான திரு. P. சுந்தரலிங்கம், திரு. M. வரதராஜன் ஆகியோரும்  சுவாமியின் அபிமானிகளும் கலந்துகொண்டனர். இந் நிகழ்வில் சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு செல்வி. ரவீந்திரன் முகூர்த்தனா அவர்களால் சுவாமிகளின் “ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று” பாடலும் இசைக்கப்பட்டது. இச் சிலையானது சிவாமிகளின் மகா சமாதி தினமான 2022.07.19ம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது.























Post Bottom Ad

Responsive Ads Here

Pages