சுவாமி விபுலானந்த அடிகளாரின் 75 ஆவது மகாசமாதி தின நிகழ்வு ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வியாழன், 21 ஜூலை, 2022

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 75 ஆவது மகாசமாதி தின நிகழ்வு !



 சுவாமி விபுலானந்த அடிகளாரின் 75 ஆவது மகாசமாதி தின நிகழ்வு,  19.07.2022  காலை 8.00 மணிக்கு விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணி மன்றத்தினரின் ஏற்பாட்டில், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு, காரைதீவு, சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.


சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணி மன்றத்தின் தலைவர், திரு.வெ. ஜெயநாதன்   அவர்கள் தலைமையில், மட்டக்களப்பு, இராமகிருஷ்ண மிஷன், உதவிப் பொது முகாமையாளர்,. ஸ்ரீமத் நீலமாதவானந்தஜீ மஹராஜ்  சுவாமிகள் திருமுன்னிலை வகிக்க, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. வே.ஜெகதீஸன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்க, தவிசாளர், பிரதேச செயலாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட வலயக் கல்விச் சமூகத்தினர், பாடசாலை அதிபர்கள், நற்பணி மன்ற நிறுவுனர்கள், அறங்காவலர் ஒன்றிய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்க நிகழ்வுகள் இடம்பெற்றது.


கமு/ விபுலாநந்த மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை), கமு/ இராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலை, கமு/ கண்ணகி இந்து வித்தியாலய மாணவர்கள் பங்குபற்றலுடன் சுவாமி விபுலாநந்தரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்வலம் பிரதான வீதி ஊடாக, கண்ணகி அம்மன் ஆலயம்  முச்சந்தியை  அடைந்து, சுவாமி விபுலாநந்தரின் திருவுருவச் சிலை திறந்துவைக்கப்படும் நிகழ்வு ஆரம்ப நிகழ்வாக   இடம்பெற்றது.    


சுவாமி விபுலாநந்தரின் இல்லத்தில் குருதேவருக்கான   பூசை வழிபாடுகள் மற்றும் சுவாமிகள் திருவுருவச் சிலைக்குப் பூமாலை அணிவித்தல் நிகழ்வுகளைத் தொடர்ந்து,  ஞாபகார்த்த மணி மண்டபத்தில் சுவாமி விபுலாநந்தரின் திருவுருவப்படம் திறந்து வைத்தல், தேவாரம், வரவேற்பு  நடனம், வரவேற்புரை, ஆசியுரை மற்றும் தலைமை உரைகளினைத் தொடர்ந்து, சுவாமி விபுலாநந்தர் கற்கை நிலைய மாணவர்களின் கலை நிகழ்வுகள், இந்து கலாசார ஒன்றிய அறநெறிப் பாடசாலை மற்றும் முருகன் ஐக்கிய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பேச்சு நிகழ்வுகள்,  இலங்கை தொலைக்காட்சி புகழ் கல்முனை சிவா அவர்களின் விபுலகீதங்கள் சிறப்பிசை நிகழ்வு, சிறப்புரைகள், பாராட்டுப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகள் ஆகியவை  இடம்பெற்றது. 
















Post Bottom Ad

Responsive Ads Here

Pages