15ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு "ஜொலிகிங்ஸ்" விளையாட்டுக்கழகம் நடாத்திய "மோகன் - கனேஸ்" T20 கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி - 2022
இச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் காரைதீவு விவேகாந்ந்தா விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து காரைதீவு விளையாட்டு கழகம் மோதியிருந்தது அதில் காரைதீவு விவேகாந்ந்தா விளையாட்டுக்கழகம் வெற்றி வாகை சூடி சம்பியனானது. இரண்டாமிடத்தை காரைதீவு விளையாட்டுகழகத்தினர் பெற்றனர்.
இந்நிகழ்வுக்கு பல்வேறு அதிதிகள் கலந்துகொண்டனர். இச்சுற்றுப்போட்டிக்கு அமர்ர் மோகன் - கனேஸ் குடும்பத்தினர் அனுசரனை வழங்கினர்.