சுபகிருது சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 39வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்தா சனசமூக நிலையமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய 24வது மாபெரும் கலாசார விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
காலை நிகழ்வான மரதன் ஓட்டமானது கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு காரைதீவு விளையாட்டு கழக காரியாலயத்தில் நிறைவுபெற்றது.
மாலையில் விபுலானந்த மைதானத்தில் தலைவர் வி.அருள்குமரன் தலைமையில் கலாசார விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார்.
காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தவிசாளர் கி.ஜெயசிறில் ஆலோசகர்களான செ.இராமகிருஸ்ணன் வே.இராஜேந்திரன் வே.த.சகாதேவராஜா உள்ளிட்ட அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
கல்வி சாதனையாளர்கள் தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.