வரலாற்று பிரசித்தி பெற்ற மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தில் முதலாவது நவோத்ர சகஸ்ர சத மகா சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தின் முதலாவது கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சிறப்பாக நடைபெற்றமை அறிந்ததே.கடந்த 29 நாட்களாக மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன.
ஆலய பிரதம குரு கிழக்கிலங்கையின் பிரபல சிவாச்சாரியாரியாருமான சிவாகம வித்யாபூஷணம் சிவாச்சார்ய திலகம் பிரதிஸ்டாதிலகம் ஜோதிடவித்யாதத்துவநிதி விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் 1008 சங்குகளுடன் காலை எட்டு மணிக்கு சங்காபிஷேக கிரியைகள் ஆரம்பமாகி, நண்பகல் அளவில் சங்காபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கிலான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர். நிகழ்வுகளின் இறுதியில் அன்னதானமும் இடம்பெற்றது.