பற்றில் ஒவ் த கோஸ்ரல் ஹொக்கியன்ஸ்' போட்டியில் காரைதீவு லயன்ஸ் அணி வெற்றி ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 9 மே, 2022

பற்றில் ஒவ் த கோஸ்ரல் ஹொக்கியன்ஸ்' போட்டியில் காரைதீவு லயன்ஸ் அணி வெற்றி !

காரைதீவு ஹொக்கி லயன்ஸ் கழகம் அமரர் திருதிருமதி அருளானந்தம் ஞாபகார்த்தமாக நடாத்திய 'பற்றில் ஒவ் த கோஸ்ரல் ஹொக்கியன்ஸ்' (Battle of the Coastal hockiens)போட்டியில் காரைதீவு லயன்ஸ் (Karaithivu Lions)அணி திருமலை கிங்ஸ் (Trinco Kings)அணியை தோற்கடித்து வெற்றிவாகை சூடியது.

அருளானந்தம் சமுக கலாசார மைய  (ASCO)அனுசரணையுடன் நடாத்திய 'பற்றில் ஒவ் த கோஸ்ரல் ஹொக்கியன்ஸ்' போட்டி காரைதீவு விபுலாநந்த மைதானத்தில்  கழகத்தலைவர் த.லவன் தலைமையில் நடைபெற்றது.  பிரதமஅதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், சிறப்பதிதியாக அருளானந்தம் தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வார் ஓய்வுநிலை  இலங்கைவங்கி முகாமையாளர் அ.மகேந்திரராஜா ஆகியோர் கலந்துகொண்டுசிறப்பித்தனர்.

கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேசசபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில், பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் ,அஸ்கோ அமைப்பின் தலைவர் அ.விவேகானந்தராஜா ,செயலாளர் சி.நந்தகுமார், இணைப்பாளர் ரி.லோஹேந்திரராஜ் ,கழகப்போசகர்களான வி.ரி.சகாதேவராஜா, தி.உமாசங்கரன் உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டனர்.

'பற்றில் ஒவ் த கோஸ்ரல் ஹொக்கியன்ஸ'
 சிநேகபூர்வ போட்டியில் காரைதீவு லயன்ஸ் மற்றும் றிங்கோ கிங்ஸ் அணியினர் கொட்டும் மழைக்கு மத்தியில் மோதிக்கொண்டனர். போட்டிமுடிவில் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் காரைதீவு லயன்ஸ் அணி வெற்றிவாகை சூடியது.கீர்த்தனன், ரவிவர்மன் ஆகிய இரு நடுவர்கள் சிறப்பாக செயற்பட்டனர்.

போட்டிநிறைவில் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், கழக ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா, அஸ்கோ செயலாளர் சி.நந்தகுமார் ஆகியோர் உரையாற்றி வெற்றிக்கிண்ணத்தை வழங்கிவைத்தனர்.இறுதியில் பாரியமழை பொழிந்தது.





 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages