இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து ஆலய புனரமைப்புக்கான நிதி உதவி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள 19 ஆலயங்களுக்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வு ம் காரைதீவில் நடைபெற்றது.
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களில் வழிகாட்ட லுக்கு அமைவாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீஸன் தலைமையில் காரைதீவு சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு, காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன்,திருக்கோவில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் க. சதீசேகர்,நிந்தவூர் பபிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் .எ.எல்.எம்.சுல்பிகார்,கல்மூனை வடக்கு நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஜீவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர்கள் .கு.ஜெயராஜ்,ந.பிரதாப், கல்முனை வடக்கு பிரதேச இந்து கலாசார உதகதியோகத்தர் திருமதி.க.சிறிப்பிரியா,திருமதி சுஜிதகதிரா,காரைதீவு பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி சி.சிவலோஜினி,நிந்தவூர் பிரதேச இந்துகலாச்சார உத்தியோகத்தர் திருமதி பா.சுஜிவனி, ஆலையடிவேம்பு பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி பி.சர்மிளா,திருக்கோவில் பிரதேச இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி தே. நிஷாந்தினி மற்றும் ஆலய தர்மகர்த்தாக்கள் நிர்வாகசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.