வரலாற்றுப் பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பங்குனி உத்தர மகோற்சவம் நேற்று மாலை வாஸ்து சாந்தியுடன் ஆரம்பமாகியுள்ளது.
9ஆம் திகதியாகிய இன்று தொடக்கம் தொடர்ந்து ஒன்பது நாட்கள் திருவிழா நடைபெறுவதுடன் தினமும் காலை 10.00 மணிக்கு கும்ப பூஜையும் 12.00 மணிக்கு விசேட பூஜையும் மாலை 6.00 மணிக்கு இரவு பூஜையுடன், நற்சிந்தனையும் வசந்த மண்டபப்
பூஜையினைத் தொடர்ந்து, அம்பாள் உள்வீதி வெளி வீதி உலாவருதல் இடம்பெறும்.
13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பாற்குட பவனியும் 16 ஆம் திகதி அம்பாள், விநாயகர், முருகப் பெருமான் சகிதம் முத்துச் சப்பரத்தில் தேரோடும் வீதி வழியாக பவனி வருதலும் இடம் பெற்று 18 ஆம் திகதி காலை நடைபெறும் சமுத்திரத் தீர்த்தோற்சவத்துடனும் 19ஆம் திகதி மாலை நடைபெறும் பைரவர் பூஜையுடன் உற்சவம் இனிதே நிறைவுபெறவுள்ளது.