கிழக்கிலங்கையின் கல்முனைமாநகரையடுத்துள்ள சேளைக்குடியிருப்பு கிட்டங்கி பிள்ளையார் ஆலயத்தின் புனராவர்த்தன மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அதற்கான சகல கிரியைகளும் 04ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, எண்ணெய்க்காப்புசாத்தும் நிகழ்வு05ஆம் திகதி சனிக்கிழமை காலை 7மணிமுதல் மாலை 5மணிவரைஇடம்பெறும்.
மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.57மணிமுதல் 10மணி வரையுள்ள காலத்தில் இடம்பெற அருள்பாலித்துள்ளது.
கும்பாhபிஷேக பிரதமகுருவாக கிழக்கிலங்கையின் பிரபல சிவாச்சாரியார், சிவாகம வித்யாபூஷணம் ,சிவாச்சார்ய ;திலகம் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் செயற்படுவார்.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிசேக பூஜைகள் இடமபெறுமென ஆலயநிருவாகசபையினர் தெரிவித்துள்ளனர்.