'ஐக்கியமாக, ஒரே மனதுடன், வலுவாக ' எனும் தொனிப்பொருளில் கொரானா பெருந்தொற்றுக்கு சவால் விடுத்த மனித நேயத்திற்கு செய்யும் மரியாதையாக கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டு முதலாவது ஆண்டை நிறைவு செய்யும் தேசிய நிகழ்வின் ஒரு அங்கமாக, காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா பஸீர் தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
முன்னதாக தேசியக்கொடி ஏற்றி தேசியகீதம் இசைக்கப்பட்டு கொரோணா தொற்றில் மரணித்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்பு ,பணிமனையின் கேட்போர்கூடத்தில் விழா காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா பஸீர் தலைமையில் நடைபெற்றது.
பிரதமஅதிதியாக காரைதீவு பிரதேசசபைச் தவிசாளர் கே.ஜெயசிறில் ,கௌரவஅதிதிகளாக காரைதீவு பிரதேசசெயலக உதவி செயலாளர் எஸ்.பார்த்திபன், சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஆன்மீகஅதிதிகளாக சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள், மௌலவி அஸ்ரப் ஆகியோர் கலந்துகொண்டு ஆசியுடன்கூடிய வாழ்த்துரைகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் பிரதான உரையை சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார்.
தலைமை பொதுச்சுகாதாரபரிசோதகர் சா.வேல்முருகு, தாதியபரிபாலகி திருமதி பவளா ராஜேந்திரகுமார் ஆகியோர் காரைதீவுப்பிரதேசத்தில் தடுப்பூசி செலுத்திய விபரணத்தை காணோளி துணைகொண்டு விளக்கவுரைநிகழ்த்தினர்.
சுகாதாத்துறையினரைப் பாராட்டும் நிகழ்வில் தாதிய உத்தியோகத்தர்கள், வைத்திய சாலை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் , விசேட அம்சமாக கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு அர்ப்பணிப்புக்களை செய்த சுகாதார துறையினர் இதன் போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.பொதுச்சுகாதாரபரிசோதகர் கே.ஜெமீல் நன்றியுரையாற்றினார்.
(காரைதீவு நிருபர் )