அரசின் 'சௌபாக்யா' வேலைத்திட்டத்தின்கீழ் இரண்டு லட்சம் சமுர்த்தி பயனாளிகளை வலுப்படுத்தும் திட்டத்திற்கமைய காரைதீவில் முதற்கட்டமாக தையல்இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
'சௌபாக்யா' வாரத்தின் இறுதிநிகழ்வாக, தையல்இயந்திரங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் பிரதேசசெயலகத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக வனஜீவராசிகள் இராஜாங்கஅமைச்சர் விமலவீர திசாநாயக்க கலந்துகொண்டு தையல்இயந்திரங்களை வழங்கிவைத்தார்.
காரைதீவில் இத்திட்டத்தின்கீழ் 100பேருக்கு 50லட்சருபா ஒதுக்கப்பட்டு அதற்கான உபகரணங்கள் பயனாளிகளின் பங்களிப்புடன் வழங்கப்பட்டுவருகின்றன.
சமுர்த்தி பயனாளிகளை அந்தந்த பிரதேச குழு தெரிவுசெய்து அரசினால் 50ஆயிரம் ருபாவும் மீதி பயனாளியினால் பங்களிப்புச்செய்து தையல்இயந்திரம் ,துவிச்சக்கரவண்டி, நீரிறைக்கும் பம்ப் போன்று தொழில்துறைக்குப்பொருத்தமான வேறு உபகரணங்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.