நாட்டில் சுபீட்சம் வேண்டி திருக்கோவில் ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் விஷேட பிரார்த்தனை ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

நாட்டில் சுபீட்சம் வேண்டி திருக்கோவில் ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் விஷேட பிரார்த்தனை !

 இலங்கைத்திருநாட்டில் வாழும் மக்களும்,  உலகெங்கிலும் வாழும் மக்களும் கொரோனாவைரஸ் தாக்கத்திலிருந்தும் ,அனைத்து நோய் நொடிகளிலிருந்தும்  மீள்வதற்காகவும் ,நாட்டில் சுபீட்சம் வேண்டியும், இலங்கை வானொலி இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனமாக மாற்றம் பெற்று  55 வருடத்திற்கான சிறப்பு ஹோம பூஜைகள் வழிபாடுகளை   இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  இறை ஆசி வேண்டி   6.30 மணிக்கு     விசேட பூசை வழிபாடுகளை  ஆலயகுரு சிவ ஶ்ரீ அங்கு சநாதக்குருக்கள்,  ஆலய  பிரதம குரு சிவஶ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள், தலைமையில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வானது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்  சேவையில் இடம்பெறும் 'ஆலய தரிசனம் ' நிகழ்ச்சியில்  காலை 6.30  மணிக்கு நேரடி  ஒலி பரப்பப்பட்டது.

இன்றைய நிகழ்வில் அம்பாறை மாவட்ட  பதில் மாவட்டச்செயலாளர்  வே.ஜெகதீஸன், திருக்கோவில் பிரதேசசெயலாளர்  ரி.கஜேந்திரன், உதவி பிரதேசசெயலாளர் க.சதிசேகரன், ஆலய தலைவர் எஸ். சுரேஸ் ஆலய வண்ணக்கர் வ.ஜெயந்தன்,இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி பிரசாத் சர்மிளா மற்றும் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனா் ஏற்பாடுகளை  மாவட்ட செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் திரு கு.ஜெயராஜி மேற்கொண்டார்.





Post Bottom Ad

Responsive Ads Here

Pages