காரைதீவு பிரதேசசபை ஊழியர்கள் நலன்புரிச்சங்கம் ஏற்பாடுசெய்த பிரியாவிடை நிகழ்வும் ,வருட இறுதிஒன்றுகூடல் நிகழ்வும் காரைதீவு விபுலாநந்த கலாசார மண்டபத்தில் சபைச்செயலாளர் அ.சுந்தரகுமார் தலைமையில் நடைபெற்றது.
பிரதமஅதிதியாக பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில், கௌரவஅதிதியாக உபதவிசாளர் ஏ.எம்.ஜாகீர், சிறப்பதிதிகளாக சபை உறுப்பினர்களான எம்.எச்.எம்.இஸ்மாயில் ,ச.சசிகுமார், த.மோகனதாஸ், ச.நேசராசா,என்.எம்.எம்.றணீஸ் ,எம்.எஸ்.ஜலீல், ஆர்.எம்.பஸ்மீர் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.
ஓய்வுபெற்று மற்றும் இடமாற்றலாகிச்சென்ற உத்தியோகத்தர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.வருடஇறுதி ஒன்றுகூடலில் ஊழியர்களின் கலைநிகழ்ச்சிகள், பாடல்கள் ,ஊழியர்களின் பிள்ளைகளின் கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் மேடையேறின.