இன்று 18ம் திகதி காரைதீவு பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் கி.ஜெயசிறில் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி பிரதம நிறைவேற்று பொறியியலாளர் திரு.ஏ.எஸ்.கெளரிபாலன் அவர்களும், கெளரவ அதிதியாக உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி அவர்களும், சிறப்பு அதிதியாக சனசமூக அபிவிருத்தி உத்தியோககத்தர் திரு.ரி.ரவீந்திரலிங்கம் அவர்களும், சாதனை அதிதியாக டாக்டர்.தணிகாசலம் தர்ஷிகா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்களான ஜனாப்.எம்.எச்.எம்.இஸ்மாயில், திருமதி.எஸ்.ஜெயராணி, திரு.எஸ்.சசிகுமார், ஜனாப்.என்.எம்.என்.றணீஸ் ஆகியோரும், காரைதீவு பிரதேச சபையின் ஆலோசனை உறுப்பினர்களான திரு.வி.ரி.சகாதேவராஜா மற்றும் திருமதி. எம்.விசாலாட்சி ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன்
இந்நிகழ்வில் கிழக்கின் சாதனை பெண் டாக்டர்.தணிகாசலம் தர்ஷிகா அவர்கள் கொழும்பு மருத்துவ பீடத்தில் அதிகூடிய 13 தங்கப்பதக்கங்களை பெற்ற சாதனையினை பாராட்டி காரைதீவு பிரதேச சபையினால் "தங்கத்தாரகை" , ஜேர்மனி, வசீகரன் அறக்கட்டளை அமைபினால் "தங்கமகள்", கனடா, காபுறோ தமிழர் அமைப்பினால் "சாதனைச் செல்வி" போன்ற விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.