இலங்கையில் முதல்முறையாக சைவ உணவு வகைகளின விபர பட்டியலை உள்ளடக்கிய நூல் ஒன்று கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது.
"ஆரோக்கிய" என்ற பெயிரில் வெளிவந்துள்ள இந்த நூலில் சைவ உணவு தொடர்பான முழுமையான பட்டியல் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பால் அல்லது மிருகங்கங்களின் இறைச்சிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் எந்த வித உணவு பொருட்களும் இவற்றை தயாரிப்பதற்கு தேவையில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் முதல் பிரதி "தர்ம ஒயிஸ் எனிமல்ஸ் " என்ற அமைப்பின் ஸ்தாபகரான பொபி அயிஸ்செக்சன் என்பவரினால் பேராதெனிய ஸ்ரீ சுபேதாராம சர்வதேச மத்திய நிலையத்தில் விகாராதிபதி சங்கைக்குரிய வத்தேகம கம்மாவாச தேரரிடம் கையளிக்கப்ட்டது.