ஏழு மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதென Disaster Management Centre விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (04) காலை 9 மணிவரையிலும் இந்த சீரற்ற வானிலை தொடருமென எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வானிலை இன்று (03) பகல் 12.30 மணிக்கு ஆரம்பித்துள்ளது.
வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை தீவிரமடைவதால், நாட்டின் கிழக்குப் பகுதியில் கடும் மழை பெய்யக்கூடுமென எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.