காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் கல்விபயிலும் மாணவர்களுக்கான முதலாவது பைசர் ரக கொரோனாத் தடுப்பூசி ஏற்றப்பட்டுவருகிறது.
12வயது முதல் 15வயதுக்குட்பட்ட சகல மாணவர்களுக்கும் இத்தடுப்பூசி பாடசாலை ரீதியாக ஏற்றப்பட்டுவருகிறது.
காரைதீவுப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தலைமையில் இத்தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் கடந்த 3தினங்களாக மாவடிப்பள்ளி அல்.அஸ்ரப் மகா வித்தியாலயம் ,விபுலாநந்தா தேசிய பாடசாலை ,சண்முக மகாவித்தியாலயம் பாடசாலைகளில் நடைபெற்றுவருகிறது.
காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமாபஷீர் தகவல் தருகையில்:
எமது காரைதீவுப்பிரிவில் சுமார் 3000மாணவர்களுக்கு கொரோனா முதலாவது தடுப்பூசி படிப்படியாக பாடசாலை ரீதியாக ஏற்றப்பட்டுவருகிறது.
அதேவேளை சுமார் 400 ஆசிரியர்களுக்கும் 2வது 3வது தடுப்பூசி வழங்கவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
நாம் செல்லும் பாடசாலையில் உள்ள ஆசிரியர்கள் இத்தடுப்பூசியை கட்டாயம் பெற்றுக்கொள்ளவேண்டும்.சுகாதாரத்திணைக்களம் விடுத்துள்ள சுகாதார நடைமுறைவிதிகளை கடைப்பிடிக்கும் அதேவேளை உரியதரப்பினர் தடுப்பூசியை உரியவேளையில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்போது நீங்கள் காப்பாற்றப்படுவதோடு ஏனையவர்களையும் காப்பாற்றமுடியும் என்றார்.