காரைதீவில் 918வீடுகளில் அதிரடி டெங்கு களப்பரிசோதனை 13பேருக்கு சட்டநடவடிக்கை 27பேருக்கு சிவப்புஅறிவித்தல்..
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்தில் அதிரடியாக டெங்கு களப்பரிசோதனை இடம்பெற்றது.
இப்பரிசோதனையின்போது 13 நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கையும் 27 நபர்களுக்கு சிவப்பு அறிவித்தலும் வழங்கப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் காரைதீவு அலுவலக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் தலைமையில் இக்களப்பரிசோதனை இடம்பெற்றது.
காலையில் சுகாதார அலுவலகத்தில் பணியாளர்களுக்கான அறிவுறுத்தல்கூட்டம் இடம்பெற்றது. தொடர்ந்து அனைவரும் பிரிந்து சென்று குறித்த பிரதேசங்களில் சமகாலத்தில் டெங்கு பரிசோதனை நடாத்தினர்.
அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் சா.வேல்முருகு ,பொது சுகாதார பரிசோதகர்கள் ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பணிபுரியும் பொது சுகாதார பரிசோதகர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,நுளம்பு கள தடுப்பு பிரிவினர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து 918 வீடுகளில் டெங்கு கள பரிசோதனை செய்யப்பட்டது.இதில் 13 நபர்களுக்கு சட்ட நடவடிக்கையும் 27 நபர்களுக்கு சிவப்பு அறிவித்தலும் வழங்கப்பட்டது.
அங்கு காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா பஷீர் கூறுகையில்:
மழைகாலமாதலால் டெங்கு பரவும் வேகம் கூடியுள்ளது. எனவே நுளம்பு பெருகுவதனை குறைக்கவும் எங்கள் பகுதியில் டெங்கு பரவுவதைத் தடுக்கவும் தினமும் 20 நிமிடங்கள் உங்கள் சுற்றுச்சூழலைப் தண்ணீர் தேங்கி நிற்கக் கூடிய பொருட்களை அகற்றி விடுங்கள் அல்லது அழித்து விடுங்கள். பொதுமக்களாகிய அனைவரும் ஒத்துழைக்குமாறு வேண்டுகோள்விடுத்துள்ளார்.
( வி.ரி.சகாதேவராஜா)