PCR மற்றும் Antigen பரிசோதனைகளுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்படவுள்ளது ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

PCR மற்றும் Antigen பரிசோதனைகளுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்படவுள்ளது !

PCR மற்றும் Antigen பரிசோதனைகளுக்கு நிர்ணய விலையை அறிவிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.


கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

தற்போது 9,950 ரூபா தொடக்கம் 50,000 ரூபா வரை நாட்டில் பல பகுதிகளில் பல்வேறு முறையில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் அறவிடப்படுவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண கூறினார்.

இதனால் PCR மற்றும் Antigen பரிசோதனைக்கு அறிவிடக்கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய, நுகர்வோர் விவகார அதிகார சபையினூடாக அடுத்த வாரமளவில் இந்த விலை நிர்ணயம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண சுட்டிக்காட்டினார்.


 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages