ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் ,அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் கீழ் சௌபாக்யா நிகழ்ச்சி திட்டத்தின் அம்சமாகவும் சேதன விவசாய பசளை உற்பத்தி ஊக்குவிப்பு திட்ட நிகழ்ச்சிகள் ,அம்பாறை மாவட்டத்தில் பரவலாக இடம்பெற்றுவருகின்றன.
விவசாய அமைச்சின்கீழுள்ள கமநலசேவைத்திணைக்களம், மாகாண மற்றும் மத்திய விவசாயதிணைக்களம் ,பிரதேச செயலகம் மற்றும் கால்நடைஅபிவிருத்திதிணைக்களம் என்பன இணைந்து இச்சேதனைப்பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் , காரைதீவு பிரதேச கமநலசேவை உத்தியோகத்தர் மா.சிதம்பரநாதன் தலைமையில் நடைபெற்றது.
அங்கு ,சேதனைப்பசளைத்தொகுதி தயாரிக்கப்பட்டது. விவசாயப்போதனாசிரியர்களான பி.பிரதீப் ரஜீனாபேகம் ஆகியோரின் வழிகாட்டலில் விவசாயிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்வில் ,விவசாயத்திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப்பணிப்பாளர் எம்.எவ்.ஏ.சனீர் ,காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன், மாவட்ட கமநலசேவை உதவிஆணையாளர் திருமதி சாமினி சோமதாச, மாவட்ட கமநலகாப்புறுதி உதவிப்பணிப்பாளர் கே.சதீஸ்குமார், காரைதீவு கமநலக்குழுத்தலைவர் இரா.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
விவசாயிகளை சேதனப்பசளை உற்பத்திசெய்ய ஊக்குவிக்கும் திட்டத்தின்கீழ் காரைதீவில் ஆறு விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உற்பத்தி ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஒரு விவசாயி 2மெட்ரிக் தொன் வீதம் சேதனைப்பசளை தயாரித்து அரசாங்கத்திற்கு வழங்க முன்வந்துள்ளனர். அதற்காக அரசாங்கம் நிதியுதவியை வழங்கவுள்ளது.
அதன்படி, முதலாவது விவசாயி தயாரித்த சேதனைப்பசளைத்தொகுதியை பார்வையிட்டு உதவுதொகை வழங்குவதற்காக பிரதேசெயலாளர் சிவ.ஜெகராஜன் உள்ளிட்ட குழுவினர் விஜயம்செய்த இரண்டாவது நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்போது ,விவசாயத்துறை உத்தியோகத்தர்கள் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
( வி.ரி.சகாதேவராஜா)