காரைதீவு பிரதேசத்தில் கொரோணா தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையோருக்கும், முதியோர் இல்லங்களுக்கும், உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் இடம் பெற்றது.
அம்பாரை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் அரச சார்பற்ற இணையத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந் நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே ஜெகதீசன் கலந்து கொண்டு பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ் பாத்தீபன், அம்பாரை மாவட்ட இணையத்தின் தலைவர் பரமசிங்கம், இணைப்பாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.