காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
நாட்டினுடைய மேன்மைதங்கிய ஜனாதிபதியின் நாட்டை சுபீட்சத்தின்பால் கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக "அனைவருக்கும் கல்வி" என்னும் தொனிப்பொருளிற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டு வருகின்றது.
அம்பாரை மாவட்டத்தில் உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் பெயர் நாமத்தில் சிறப்பாக காரைதீவு கிராமத்தில் பல கல்விமான்களை உருவாக்கிய விபுலாநந்தா மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக அண்மையில் தரமுயர்த்தப்பட்டது.
தரமுயர்த்தப்பட்டதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு (16.08.2021)ம் திகதி அம்பாரையில் அமைந்துள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் W.D வீரசிங்க அவர்களின் காரியாலயத்தில் வைத்து பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலைகளின் நிருவாகத்தினரிடம் வழங்கிவைக்ப்பட்டது.