பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலய அரசியல்இ கல்விஇ கலாச்சார செயலாளர் ஆயிஷா அபூபக்கர் பஹாத் அம்பாறை மாவட்ட பாடசாலை வளங்கள் மற்றும் கல்வி மேம்பாடுகள் தொடர்பில் ஆராயும் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
இதன்போது காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி சென்று கல்வி நிலைகள்இ வள நிலவரங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இந்த விஜயத்தின் போது கல்வியமைச்சின் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் இசட். தாஜுதீன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஓய்வு பெற்ற பிரதம பொறியியலாளர் என்.டீ.எம். சிராஜுதின் பாடசாலை நிர்வாகம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம், பாடசாலை பழைய மாணவர்கள் அமைப்பு போன்றவர்களுடன் பாடசாலைகளின் கல்வி நிலைகள், தேவைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் பாடசாலை நிர்வாகத்தினர்களினால் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலய அரசியல், கல்வி, கலாச்சார செயலாளர் ஆயிஷா அபூபக்கர் பஹாத்திடம் தேவைகள் அடங்கிய மகஜர்களும் கையளிக்கப்பட்டது.