ஜனாதிபதியின் சௌபாக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
சௌபாக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சமூர்த்தி வீடு லொத்தர் சீட்டிலுப்பில் வெற்றி பெற்ற 10ஆம்; கிராம சேவகர் பிரிவிலுள்ள சமூர்த்தி பயனாளிக்கு குறித்த வீடு கையளிக்கப்பட்டது.
காரைதீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் கே.சத்தியப்பிரியன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் காரைதீவுப் பிரதேச செயலாளர்
எஸ்.ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளியின் வீட்டைத் திறந்து வைத்தார்.