வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காமம் கந்தனாலயத்தின் ஆடிவேல்விழா உற்சவத்தின் இறுதிநாள் தீர்தோற்சவம் (24.07.2021) காலை மாணிக்கங்கையில் சிறப்பாக நடைபெற்றது.
காலை ஆலயத்திலிருந்து பனங்கொத்தால் மறைக்கப்பட்ட இரகசியப்பேழை மங்களவாத்தியங்கள் முழங்க கொணரப்பட்டு மாணிக்கங்கையில் தீர்த்தமாடப்பட்டது.
இதன்போது பொலிசார் பலத்த பாதுகாப்புவழங்க ஆலயநிருவாகிகள் கிரியாகாலகுருமார் மாத்திரம் பங்கேற்றலுடன் தீர்த்தம் இடம்பெற்றது. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கதிர்காமம் கந்தனாலயத்தின் ஆடிவேல்விழா உற்சவம் கடந்த 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
கொவிட் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் சுகாதாரவிதிமுறையின்படி திருவிழாக்கள் பெரஹராக்கள் இடம்பெற்றுவந்தன. இறுதிசில நாட்களில் முடக்கமும் அமுல்படுத்தப்பட்டது.அதனால் பக்தர்களுக்கு முற்றாக தடைசெய்யப்பட்டிருந்தது.