கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் கடந்த 10ஆம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி தினமும் திருவிழாக்கள் பூஜைகளுடன் எளிமையாக நடந்தேறிவருகின்றது.
நேற்றிரவு அங்கு மிகவும் குறைந்த பக்தர்களுடன் முருக்பெருமான எழுந்தருளி உள்வீதியுலா வந்தார். ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் தலைமையிலான குருக்கள் திருவிழாவை சிறப்பாக நடாத்திவருகின்றனர்.
நாட்டின் கொவிட் நிலைமை காரணமாக பக்தர்கள் மற்றும் பாதயாத்திரீகர்களுக்கு அரசசுற்றுநிருபப்படி 50பேருக்குள் மட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளது.. நேர்த்திக்கடனும் செலுத்தமுடியாது.
ஆக ஆலய குருக்கள் நிருவாகசபையினர் உபயகாரர்கள் என 50பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அவர்களுக்கும் அன்ரிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே ஆலயத்துள் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
பொலிசார் இராணுவத்தினர் உள்ளிட்ட அனைவரையும் விசேட பாதுகாப்பு மற்றும் வீதிச்சோதனை கடமையில் ஈடுபட்டுவருகின்றனர்.
வி.ரி.சகாதேவராஜா