தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியரான முதலாவது தமிழர்! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

செவ்வாய், 13 ஜூலை, 2021

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியரான முதலாவது தமிழர்!


தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகத் தெரிவான முதலாவது தமிழராக முகாமைத்துவபீட பீடாதிபதி கலாநிதி செல்வரெத்தினம் குணபாலன் விளங்குகிறார்.

உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த காரைதீவைச்சேர்ந்த செல்வரெத்தினம் பொன்னம்மா தம்பதியினரின் புதல்வரான இவர் தற்சமயம் தம்பிலுவிலில் வாழ்ந்துவருகிறார்.

திருக்கோவில் பிராந்தியத்தின் முதலாவது பேராசிரியரான கலாநிதி செ.குணபாலன், வினாயகபுரத்தில் பிறந்து இந்த உயர்நிலையை அடைந்துள்ளமையையிட்டு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.,

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக தெரிவான ஜந்து பேரில் கலாநிதி குணபாலன் ஒருவராவார்.பல்கலைக்கழகத்தில் 20வருட விரிவுரையாளர் சேவையைக் கொண்டவர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவபீடத்தின் இரு தடவைகள் பீடாதிபதியாகக் கடமையாற்றிய கலாநிதி எஸ். குணபாலன் அவர்கள் ,முகாமைத்துவப் பேராசிரியராக 12.12.2019 ஆம் திகதியிலிருந்து செயற்படும்வண்ணம் பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.

இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால விரிவுரையாளர்களில் ஒருவராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செல்வரத்தினம் மற்றும் லட்சுமி (பொன்னம்மா) தம்பதியினரின் புதல்வரான இவர் தனது ஆரம்பக்கல்வியை திருக்கோவில் வினாயகபுரம் மஹா வித்தியாலயத்திலும், பின்னர் இடைநிலைக்கல்வியினை தம்பிலுவில் மத்திய மஹா வித்தியாலயம் மற்றும் தனது உயர்தரக் கல்வியினை யாழ்- சென் பெற்றிக்ஸ் கல்லூரியிலும் பெற்றார்.

தனது நிருவாகமானி சிறப்புப் பட்டத்தினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் ,முதுமானிப் பட்டத்தினை களனிப் மற்றும் இந்தியாவின் அழகப்பா பல்கலைக்கழகத்திலும் பெற்று, தனது கலாநிதிப் பட்டத்தினை இந்தியாவின் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(வி.ரி.சகாதேவராஜா)
 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages