சம்மாந்துறைப்பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவில் இடம்பெற்ற ஆட்டோ விபத்தில் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் (01.07.2021) காலை சம்பவித்துள்ளது.சாய்ந்தமருதைச்சேர்ந்த ஆட்டோ காரைதீவு பிரதானவீதியால் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட வாகனக்கோளாறு காரணமாக திடீரென பாதையைவிட்டுவிலகி வயலுக்குள் பாய்ந்தது.
ஆட்டோ சேதமடைந்தபோதிலும் சாரதியின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை.சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சம்மாந்துறைப்பொலிசார் விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
(வி.ரி.சகாதேவராஜா)