கல்முனைக்கு 50 ஆயிரம் சினோபாம் தடுப்பூசி அடுத்தவாரம்! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

செவ்வாய், 20 ஜூலை, 2021

கல்முனைக்கு 50 ஆயிரம் சினோபாம் தடுப்பூசி அடுத்தவாரம்!

( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனைப்பிராந்தியத்திற்கு அடுத்தவாரம் 50ஆயிரம் சினோபாம் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்படுமென்று சுகாதார அமைச்சின் சுகாதாரசேவைபணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேலகுணவர்த்தன கல்முனை விஜயத்தின்போது தெரிவித்தார்.


நேற்று (18) ஞாயிற்றுக்கிழமை சுகாதாரசேவை பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேலகுணவர்த்தன தலைமையிலான உயர்மட்ட சுகாதாரஅதிகாரிகள் குழுவினர் கல்முனைக்கு விஜயம் செய்தனர்.
கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தலைமையில் நீண்டநேரம் கலந்துரையாடல் அவரது பணிமனையில் இடம்பெற்றது.


பிரதி சுகாதாரசேவைப்பணிப்பாளர் நாயகம் டாக்டர் எல்.பானப்பிட்டிய டாக்டர் சுதத் தர்மரத்ன உள்ளிட்ட குழுவினர் வருகைதந்திருந்தனர் கிழக்கு மாகாண சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் எ.ஆர்.எம்.தௌபீக் கலந்துரையாடலை நெறிப்படுத்தினார்.
கல்முனைப்  பிராந்திய சுகாதார நிலைமை கொவிட் 19 பரம்பல் தடுப்பு முறைகள் பற்றி விலாவாரியாக கலந்துரையாடப்பட்டது.

இறுதியில் குழுவினர் கல்முனை ஆதாரவைத்தியசாலை கல்முனை அஸ்ரப் ஆதாரவைத்தியசாலை அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் ஆதாரவைத்தியசாலைகளுக்கும் விஜயம்செய்து சுகாதார செயற்பாடுகளை அவதானித்தனர்.
குழுவினர் கல்முனைப்பிராந்திய கொவிட் குழுவினரைப்பாராட்டி விடைபெற்றனர்.



 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages