நேரடி ஒளிபரப்பு தொடர்பான அறிவித்தல் !!!
எமது இணையத்தளமானது ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக காரைதீவு கண்ணகி அம்மன்ஆலய திருக்குளிர்த்தி உற்சவ நிகழ்வுகளின் செய்திகளை பிரசுரித்து வருவதுடன், 2012ம் ஆண்டிலிருந்து இறுதிநிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்புகளையும் மேற்கொண்டு வருவத்துடன் பக்தர்கள் ஆலயத்தினுள் மட்டுப்படுத்தப்பட்ட சந்தர்பங்களிலும் தொடர்ச்சியாக பூசை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதும்நீங்கள் அறிந்ததே.
எனினும், கொவிட்-19 நோய்ப் பரவல் அதிகரிப்பினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கடுமையான சுகாதார் விதிகள்காரணமாக இவ்வருடம் ஆலயத்தில் நடைபெறும் நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய இயலாமையை எமதுஅன்பார்ந்த காரைதீவு.ஓர்க் உறவுகள் மற்றும் கண்ணகி அம்மன் அடியவர்களுக்கு மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எனினும் இறுதிநாள் சடங்குகள் மற்றும், திருக்குளிர்த்தி நிகழ்வுகளை நேரடி அஞ்சல் செய்ய முயற்சிஎடுக்கப்பட்டுள்ளது. உரிய நிலமைகள் சாதகமாகமாயின், நேரடி அஞ்சல் செய்யமுடியும் என்பதனையும் அறியதருகின்றோம்.
காரைதீவு.ஓர்க் இணையக்குழு.