பன்னிரண்டாவது ஆண்டு அணையா நினைவுகளில்...
"அமரர் கனகசபை பத்மநாதன்"
(முன்னாள் பாராரளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு-
திகாமடுல்ல மாவட்டம், முன்னாள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை - முகாமையாளர், முன்னாள் காரைதீவு ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலய தர்மகர்த்தா )
அன்பும் அறனும் உடைத்தான குவலயத்தில்
புன்னகையும் இன்மொழியும் மொழிந்து
அல்லதுரையும் அன்புடன் அரவணைத்த
மண்ணை மதித்த மாமனிதர்.
கண்ணென கடமை போற்றி
விண்யொத்த மனம் படைத்து
சத்தமின்றி சாதனைகள் புரிந்து
சத்தியத்தின் வழியே சென்றவர்.
அறிவும் ஆற்றலும் அமைந்ததனால்
காலமெல்லாம் கருத்துடனே காரியமாற்றி
தமிழர் தாயக உரிமை வென்றிட
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தார்.
மக்கள் சேவகனாய் சேவை புரிந்து
அம்பாறை தமிழ் மக்களின் ஏகோபித்த
மக்கள் குறை தீர்க்கும் தீரராய்
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற பிரதிநிதியானார்.
ஓம் சாந்தி ! சாந்தி !! சாந்தி !!!
ஆத்ம சாந்திக்காக அர்ச்சிக்கும், உடன் பிறப்புக்கள்
க.கதாதரன், நடராஜானந்தா வீதி, காரைதீவு-02.
(T.P-0755700882)