காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழா விஞ்ஞாபனம்-2021
காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி வைபவத்திற்கான சடங்குகள் கொரோனா நெருக்கடி காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பமாகவுள்ளது.
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திச்சடங்குகள் 17-05-2021 திங்கட்கிழமை கடல்தீர்த்தம் கொணர்ந்து கல்யாணக்கால் நடலுடன் ஆரம்பமாகவுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக பக்தர்கள் ஆலயத்திற்கு செல்ல முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி வைபவம் மே 17ஆம் திகதி கதவுதிறத்தலுடன் ஆரம்பமாகி 25ஆம் திகதி அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும்.
இதேவேளை இம்முறை கொரோனா காரணமாக சடங்கு தொடர்பாக பலதீர்மானங்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டன. அவற்றில் சில.....
- பக்தர்கள் ஆலயத்துள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- ஆலயக்கிரியைகள் சடங்குகள் யாவும் வழமைபோல் நடைபெறும்.
- ஆனால் அனைத்தும் தேசிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெறும்.
- அதேபோல் எட்டாம் நாள் நடைபெறும் எட்டாம் சடங்கு கூட வெளியார் பொங்கலிலின்றி உள்பொங்கலுடன் மாத்திரம் நடைபெறும். கடைத்தெருவுக்கு அனுமதியில்லை.
ஏனைய விதிமுறைகள் பின்னர் முழுமையாக அறிவிக்கப்படும்.