இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு வேதநாயகம் ஜெகதீசன் அவர்களும்இ அதிதிகளாக நிந்தவூர் பிரதேச செயலாளர் ஜனாப் எம்.ரி.எம் . அன்சார் அவர்களும்இ காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு எஸ்.பார்த்திபன் அவர்களும் மற்றும் காரைதீவுஇ நிந்தவூர் பிரதேச செயலக சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர்கள்இ திட்ட முகாமையாளர்கள்வங்கி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்இதன்போது புதிய இளம் தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் வழங்கல் நிகழ்வும்இ பயனாளிகளுக்கான நிவாரண கொடுப்பனவு வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகளை மேம்படுத்தும் முகமாக காரைதீவு மற்றும் நிந்தவூர் பிரதேச செயலகங்களுக்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளின் அனுசரணையுடன் "சமுர்த்தி அபிமானி வர்த்தக கண்காட்சி " காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கபடா வளாகம் மற்றும் காரைதீவு வைத்தியசாலை வளாகத்தில் ஏப்ரல் 07இ 08 ம் திகதிகளில் காலை 8.30 தொடக்கம் மாலை 7.30 வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையிட்டு இன்று (07) உத்தியோகபூர்வமாக பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.