சர்வதேச மகளிர் தினம் இன்றாகும்.
1857ம் ஆண்டில் அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த பெண்கள் நிர்வாகத்திற்கு எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் உலக மகளிர் தினத்திற்கு பின்னணியாக அமைந்தது. அந்த நிறுவனத்தில் நிலவிய பணிபுரிவதற்கு பொருத்தமற்ற சூழலுக்கும் குறைந்த சம்பளத்திற்கும் எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
1910ம் ஆண்டில் டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற உலக மகளிர் சம்மேளனத்தில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கிளாரா சேர்க்கின் என்பவரால் முன்வைக்கப்பட்ட யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மார்ச் 8ம் திகதி உலக மகளிர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
1911ம் ஆண்டு முதல் இந்தத் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
1978ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி முதல் இலங்கையும் உலக மகளிர் தினத்தை உத்தியோகபூர்வமாக கொண்டாட ஆரம்பித்தது