ஒழுக்கவிழுமியங்களைக் கடைப்பிடித்து முன்மாதிரி இளைஞராகுங்கள்
இளைஞர்சம்மேளன அமைப்புக்கூட்டத்தில் தவிசாளர் ஜெயசிறில் ஆலோசனை..
சமுகத்தில் இளைஞர்கள் படித்தால் மட்டும் போதாது மாறாக ஒழுக்கவிழுமியங்களைக்கடைப்பிடித்து சிறந்தநல்லொழுக்கமுள்ள முன்மாதிரியான இளைஞராக மாறவேண்டும்.
இவ்வாறு காரைதீவுப்பிரதேசத்திற்கான இளைஞர்சம்மேளனம் அமைக்கும் கூட்டத்தில் பிரதமஅதிதியாகக்கலந்துகொண்டுரையாற்றிய காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஆலோசனைவழங்கினார்.
காரைதீவு இளைஞர்கழகங்களின் பிரதேசசம்மேளன புனரமைப்புக் கூட்டம் காரைதீவு பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.ஜ.எம்.பரீட் தலைமையில் பிரதேசசெயலக கேட்போர்கூடத்தில் நேற்று நடைபெற்றது.
இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எ.அஜித்குமார் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.முபாறக்அலி உதவிபிரதேசசெயலாளர் எ.பார்த்தீபன் கௌரவஅதிதிகளாகக்கலந்து சிறப்பித்தனர்.
அங்கு தவிசாளர் ஜெயசிறில்மேலும் உரையாற்றுகையில்:
இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம். உங்களது சக்தி மகத்தானது. நீங்கள் நினைத்தால் வியத்தகு சாதனைகளைச் புரியலாம்.
எமது பிரதேச வளங்களை இனங்கண்டு அதற்கேற்ப பலதிட்டங்களைத்தீட்டி அதனை நடைமுறைப்படுத்தி மதிப்பீடும் செய்யவேண்டும். அத்திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்றடைகின்றதா என்பதையும் கண்காணிக்கவேண்டும்.
எதற்கும் கலந்துரையாடல் அவசியம்.
அன்னை தெரேசா அண்ணல் மகாத்மாகாந்தி போன்ற சமுக முன்மாதிரிகளை நாம் பின்பற்றவேண்டும். அதற்கு நாம் சிறந்த ஒழுக்கசீலர்களாக திகழவேண்டும்.என்றார்.
கூட்டத்தில் புதிய பிரதேசசம்மேளன நிருவாகிகள் தெரிவுசெய்யப்பட்டனர்.
தலைவராக வி.சர்மிளகாந்தன் உபதலைவராக எஸ்.எம்.சம்ஸித் உபசெயலாளராக ஆர்.அபிஷேக் என்.தினேஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
( வி.ரி.சகாதேவராஜா)